Monday 12 February 2018

நடைபிணங்கள்...!

இளமைக்கால கனவுகளோடுதான்
ஒவ்வொருவரின் வாழ்க்கை பயணமும் தொடங்குகிறது. ,
ஆனால் காலம் அவர்கள் சென்றடையம் இலக்கை மாற்றிவிடுகி்றது .

தொடங்கிய இடத்திலே முடிந்து போனவர்களும் , வழியிலே தொலைந்து போனவர்களும்
உண்டு.ஒரு சிலரேஅந்தமைல் கல்லை தொட்டு இருக்கிறார்கள்.
அது கூட முழுமையாக அல்ல...!
என்பதே வாழ்வின் யதார்த்தம்.

பணமா , எதிர்கால கனவா என்ற
பந்தயத்தில் சுக - துக்கங்களோடு
இளமையையும் ,வயதையும் தோலுரித்தே பணபசிக்கே இரையாகி போகிறார்கள்.

அதில் நாடுகடந்து அடிமைப்பட்டு
போனவர்களின் மரண ஓலங்களில்
உள்ளூர் மண்ணில் வீட்டு வேலைக்கு சென்று புதைகுழியில் புதைந்து போனவர்களை யார் அ்றிவார்..?

குற்றுயிராக கிடக்கும் பிணத்திற்கு உள்நாடென்ன..?வெளிநாடென்ன..?
மயானங்களின் வேறுபாட்டை விவாதிக்க பட்டிமன்றம் தேவயில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே..!
மாற்று கோஷமில்லை...
வாழ்க்கைக்கான வாய்ப்புகளை
அடைத்தொழித்துவிட்டு
வாழுங்கள் என்று சொல்லும்
மூடர்களின் கூற்றை ஏற்பதற்கில்லை.

வயிறு பிழைக்க காகிதத்தை
உண்டு வாழும் கழுதைகளோடு
மனிதர்களை தயவு கூர்ந்து ஒப்பிடாதீர். ஏனென்றால்
கழுதைகளை விட நடைபிணங்கள்
மேலானவை.


No comments:

Post a Comment